கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஏப்ரல் 4ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை திருவனந்தபுரம் பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் பெங்களூரில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06555) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

மறு மாா்க்கத்தில் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06556) மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.