நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களில் 05.10.2024 மற்றும் 06.10.2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்று கிழமை உட்பட அனைத்து நாட்களிலும், வரிவசூல் மையங்கள் வழங்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
எங்கெல்லாம் இந்த முகாம் நடைபெறும்?
கிழக்கு மண்டலத்தில், வார்டு எண்.24க்குட்பட்ட குருசாமி நகர், வார்டு எண்.53க்குட்பட்ட காந்தி நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வார்டு எண்.7க்குட்பட்ட நேரு நகர், பேருந்து நிலையத்திலும், மேற்கு மண்டலத்தில், 05.10.2024 சனிக்கிழமை அன்று வார்டு எண்.36க்குட்பட்ட ரவி முருகன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.39க்குட்பட்ட பெருமாள் கோவில் வீதி, சுண்டப்பாளையம் பகுதியிலும், 06.10.2024 ஞாயிற்று கிழமை, வார்டு எண்.42க்குட்பட்ட மருதகோனார் வீதியில், வார்டு எண்.75க்குட்பட்ட மாரியம்மன் கோவில் வீதி, சீரநாயக்கன்பாளையம் பகுதியில், வார்டு எண்.35க்குட்பட்ட தேவாங்க நகர், கற்பக விநாயகர் கோவில் பகுதியில், வார்டு எண்.38க்குட்பட்ட ஓணாப்பாளையம், விநாயகர் கோவில் (Stage), வடக்கு மண்டலத்தில், வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், அம்மா உணவகம், வார்டு எண்.28க்குட்பட்ட காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தெற்கு மண்டலத்தில், வார்டு எண்.85க்குட்பட்ட கோனவாய்க்கால்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.97க்குட்பட்ட கம்பீர விநாயகர் கோவில் மண்டபம், ஹவுசிங்யூனிட் பேஸ்-1, வார்டு எண். 89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மற்றும் மத்திய மண்டலம். வார்டு எண்.32க்குட்பட்ட நாராயணசாமி லே-அவுட், சிறுவர் பூங்கா, வார்டு எண்.70க்குட்பட்ட எம்.என்.ஜி.வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண். 63க்குட்பட்ட 80 அடி சாலை, பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80க்குட்பட்ட கெம்பட்டி காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும்.