கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக நாளை சனி (23.11.2024) மற்றும் ஞாயிறு (24.11.2024) ஆகிய இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களின் விவரம்:
கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் இங்கெல்லாம் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும்!
- by CC Web Desk
- Nov 22,2024