கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரிகளையும் மக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம் மற்றும் வரிவசூல் பணி நடைபெறும்.

அந்த வகையில், கோவை மாநகரில் உள்ள அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் 14.12.2024 மற்றும் 15.12.2024 ஆகிய 2 நாட்களிலும் காலை 9.00மணி முதல் மாலை 4.00மணி வரை செயல்படும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்:-