வரும் 26ல் சிவராத்திரி, கோவை வெள்ளியங்கிரி மலையில் கூடுதல் மருத்துவ முகாம்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது!
- by David
- Feb 14,2025
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 2025 பிப்.1 முதல் மே.31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நலனுக்காக பூண்டி மலை அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு மருத்துவ பரிசோதனை செய்ய 2 டாக்டர்கள் கொண்ட குழு உள்ளது. வரும் 26ம் தேதி சிவராத்திரி தினம் என்பதால் அன்று மலையேறுபவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். பக்தர்கள் நலனுக்காக 3 வது மலை மற்றும் 6 வது மலையில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
6வது மலையிலும், 7 வது மலையிலும் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வரும் 26ம் தேதி மகா சிவராத்திரி என்பதால் அதிக அளவில் பக்தர்கள் மலையேறுவார்கள் என்பதால் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் மருத்துவ முகாம்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.