கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம் கீழ் வரும் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாம் இன்று வடவள்ளியில் உள்ள அருள்மிகு சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில், நடைபெற்றது.
சொத்து வரி மற்றும் காலியிட பெயர் மாற்றம், காலியிட வரி விதிப்பு, வரி குறித்த அனைத்து வித திருத்தங்கள், வரிப்புத்தகம் வினியோகம், புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு, குடியிருப்பு முறையில் இந்து வணிக முறைக்கு மற்றும் வணிக பயன்பாட்டில் இருந்து குடியிருப்பு முறைக்கு மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொடர்பான புகார்கள், தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் துார்வாருதல், சாலை வசதி, பராமரிப்பு பணி, மாநகராட்சி பள்ளி பராமரிப்பு, பிறப்பு - இறப்பு சான்று கோருதல், திருத்தம் செய்தல், தொழில் உரிமம் கோருதல், டி.எஸ்.எல்.ஆர்., நகல் மற்றும் பெயர் மாற்றம், கட்டட அனுமதி விண்ணப்பம், மனை வரன்முறைப்படுத்துதல், சர்வே வரைபடம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த முகாமில் பெறலாம்.
இந்த முகாமிற்கு இம்முறை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மொத்தம் 316 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் 44 மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள 272 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாமில் 44 மனுக்கள் மீது அதே இடத்தில் தீர்வு வழங்கப்பட்டது!
- by David
- Oct 10,2024