ரூ.30க்கு முழு சாப்பாடு! கோவையில் மற்றுமொரு சேவை நோக்கிலான உணவகம்!
- by David
- Mar 28,2023
கோவை RVS பத்மாவதி சமூக நல அறக்கட்டளை சார்பில் மார்ச் 26, 2023 அன்று கோயம்புத்தூர் சூலூர் குமரன் கோட்டத்தில் சேவை நோக்கிலான உணவகம் ஒன்று துவக்கி உள்ளது.
இதில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று வேளைக்குமான விதவிதமான உணவுகள் தரமாகவும் எளிய மக்கள் திருப்தியுடன் சாப்பிட மிக குறைந்த விலையில் வழங்கப்படும்படி வழி செய்யப்பட்டுள்ளது.
RVS குழுமம் அதன் தலைவர் டாக்டர் கே.வி.குப்புசாமி வழிகாட்டுதலில் ஏற்கனவே கல்வி, மருத்துவம், விவசாயம், ஆன்மீகம், ஆன்மீகம் போன்ற துறைகளில் தன் பங்களிப்பை வழங்கி வருகிறது.
அதற்கு அடுத்தபடி எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் உணவு துறையிலும் சேவை செய்ய வேண்டி இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்று வேளையில் பொதுமக்கள் எப்போது வந்தாலும் அங்கு இந்த குறைவான கட்டணத்தில் நிறைவான உணவை அமர்ந்து சாப்பிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் சௌகரியமாக அமர்ந்து சாப்பிட வசதிகள் பெரும் உணவகங்களுக்கு இனயாகவே அமைக்கப்பட்டுள்ளது.