கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து பாம்பு பிடி வீரர் சந்தோஷ் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றார். அந்த பகுதியில் புகுந்த பாம்பு கடும் விஷமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது. சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகும் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விடுவித்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு பாம்பு பிடித்தபோது அது அவரை கடித்துள்ளது. பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரியவருகிறது.