வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, அவர் வைத்திருந்த பேக்கில் 4 தங்க கட்டி மற்றும் தங்க நகைகள் இருந்தன. இது 854 கிராம் எடையில் இருந்தது. இதன் மதிப்பு 63.24 லட்சம் ரூபாய்.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணியை பிடித்து விசாரித்து வருகின்றனர். நகைகள் உரிய வரி செலுத்தாமல் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. வரி ஏய்ப்பு செய்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது என வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.