கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.7 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள் இன்று காலை சுங்கவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த வகை சிகரெட்களில் தார், நிக்கோடின் போன்ற நச்சு பொருட்கள் அளவு குறைவாக இருக்கும் என்பதால்  கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதத்தில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் 4 நாட்களில் 40,000 கடத்தல் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News & Photo by Ra.Gopal