தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 22 முதல் 24 ஆம் தேதி வரை, பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதிகள் மற்றும் முக்கியமான இடங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகர போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்த மூன்று நாட்களில் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்களை தவிர, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை, சிவானந்தாகாலனி சாலையை பயன்படுத்தி செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தையோ அல்லது அந்தந்த கடைகளில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

மேலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம், சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.


 ஒப்பணக்காரவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பொருட்களை வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தை அல்லது அந்தந்த கடைகளில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

ஆத்துப்பாலத்திலிருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவிநாசிரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்காரவீதியை பயன்படுத்தாமல், உக்கடத்திலிருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம்  வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

உக்கடத்திலிருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள், பேரூர் பைபாஸ்  ரோடு, செல்வபுரம் ரவுண்டானா, செட்டிவீதி சலிவன் வீதி, காந்தி பார்க் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

பாலக்காட்டிலிருந்து கோவை மாநகருக்குள் வரும் வாகனங்களில் போத்தனூர்,சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் கண்ணாம்பு காள்வாயிலில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.

உக்கடத்திலிருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா, புட்டுவிக்கிரோடு வழியாகசெல்லலாம்.