இன்று வெளியான 2025-26க்கான தமிழக பட்ஜெட்டில் கோவையின் வளர்ச்சிக்காக பல அறிவிப்புகள் வெளிவந்தது. பட்ஜெட்டில் கோவை வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பல காலமாக வெள்ளலூர் பகுதியில் நின்றுபோன ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மீண்டும் துவங்கவேண்டும் எனவும் வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றவேண்டும் எனவும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது இதுவரை கிடைக்கவில்லை. 

இந்நிலையில், குப்பை கிடங்கை அகற்றவேண்டும் எனவும், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று துவங்கியது.

இந்த 2 திட்டங்களுக்கும் உள்ள மக்கள் ஆதரவை அரசுக்கு கனிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற 1 லட்சம் கையெழுத்துகளை பெற்று முதலமைச்சருக்கு அனுப்ப இந்த கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.