பிரபல நடிகர் கரண் இன்று கோவை மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

1990களில் நடிகர் கரண் தமிழ் திரையுலகத்தில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்தார். இவர் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, பிரஷாந்த் ஆகியோருடன் இனைந்து நடித்திருக்கிறார். நடிகர் கமல் உடன் இவர் 1994ல் வெளிவந்த நம்மவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

1996ல் வெளிவந்த கோயம்புத்தூர் மாப்பிளை திரைப்படத்தில் நடிகர் கரண் வரக்கூடிய காட்சிகளில் 'ஷ்ரூவ்' என்ற பின்னணி இசை இவரை இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆக்கியது.

சமீபகாலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் வாய்ப்புகள் மீண்டும் வர துவங்கி இருப்பதால் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார். இன்றும் கரணை கொண்டாடும் ரசிகர்கள் அவருடன் மகிழ்ச்சியுடன் செலஃபீ எடுத்துக்கொண்டனர்.