வரும் சனிக்கிழமை டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 12 நாட்களுக்கு கொடிசியா வர்த்தக வளாகத்தில் 'கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா' நடைபெற உள்ளது.

 

தொழில்துறை அமைப்பான கொடிசியா சார்பில் பத்தாவது முறையாக நடைபெறும் இந்த ஷாப்பிங் திருவிழாவில் மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, பீகார் கேரளா, தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் இருந்து நகைகள், பரிசு பொருட்கள், வீட்டிற்கு தேவையான சமையல் சாதனங்கள், கைவினைப் பொருட்கள், ஆர்கானிக் உணவு வகைகள், பர்னிச்சர் 380 ஸ்டால்களில் 310 கண்காட்சியாளர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

 

மேலும் இந்த ஷாப்பிங் திருவிழாவில் 17 பல்சுவை உணவு ஸ்டால்களும் இடம்பெறும். இத்துடன் பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

 

இத்துடன் குழந்தைகள் விளையாடி மகிழ 15 வகையான விளையாட்டுகளை 500 ரூபாய் செலுத்தியும் 10 வகையான விளையாட்டுகளை 300 ரூபாய் செலுத்தியும் விளையாட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

 

கடந்த முறை 10 நாட்கள் நடைபெற்ற கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவில் 90,000 பேர் வருகை புரிந்தனர். இம்முறை 1.25 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 5 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.