ஆகஸ்ட் 20ம் தேதி பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்களின் பணிமாறுதல் பற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் அப்போது அறிவிக்கப்பட்ட பணி மாறுதலில் சில திருத்தம் செய்து தற்போது புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி கோவை மாவட்ட கல்வி அலுவலராக (இடை நிலை) நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) தி. கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக திருப்பூர் மாவட்ட  கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) பணிமாறுதல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.