தமிழ்நாட்டில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்க வழிவகை செய்யும் வகையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளது. 


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் "சட்டவிரோத கல்குவாரி" குறித்த செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பாலாஜியை கல்குவாரிக்கு ஆதரவான சில குண்டர்கள் தாக்கியுள்ள செய்தி வெளியானதை தொடர்ந்து பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்ட மசோதா உடனே கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.


அந்த ஒளிப்பதிவாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய விடும் என கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி வருகின்றனர்.