ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அன்று 2025 உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் K.மாதேஸ்வரன் தலைமை உரையாற்றினார். மேலும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்று உரையாற்றிஅவர் அறிவுறுத்தினார். கல்லூரியின் அறங்காவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் கீர்த்தனா சிறப்புரை வழங்கினர்.
புற்றுநோய் கருத்தரங்கில் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் N.சுதாகர் புற்றுநோய் விழிப்புணர்வு உரையாற்றினார். இதை தொடர்ந்து மருந்தாளர் G.அந்தோணி விஷால் "புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சையில் செவிலியர் பங்கு" என்ற தலைப்பில் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
மேலும் மாணவர்கள் நடத்திய கண்காட்சியில் புற்றுநோய் விளக்கப்படங்களும் மாணவர்கள் கொடுத்த விளக்க உரையும் அனைவராலும் பாராட்டப்பெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் ஜாய் நன்றி உரை வழங்கினார்.
உலக புற்றுநோய் தினம் 2025: ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- by CC Web Desk
- Feb 04,2025