ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை (அஸ்பெர்கில்லோசிஸ்) நோய் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில் அலர்ஜிக் பிராங்கோபல்மனரி அஸ்பெர்கில்லோசிஸ் (Allergic Bronchopulmonary Aspergillosis - ABPA மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை) மற்றும் க்ரானிக் பல்மனரி ஆஸ்பெர்கில்லோசிஸ் (Chronic Pulmonary Aspergillosis - CPA நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை ) பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நுரையீரல் துறையின் முக்கிய நிபுணர்களான டாக்டர். வி.ஆர். பட்டாபிராமன், டாக்டர். ரிதேஷ் அகர்வால், மற்றும் டாக்டர். இந்தர்பால் சிங் சேகல் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட நுரையீரல் மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராயல் கேர் மருத்துவமனை இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை ஆலோசகர்களான டாக்டர். வி.ஆர். பட்டாபிராமன், டாக்டர். எஸ். மகாதேவன், மற்றும் டாக்டர். அர்ஜுன் சீனிவாசன் இக்கல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். இது ABPA மற்றும் CPA நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை அதிகரிக்கவும், பராமரிப்பு முறைகளை ஒரே மாதிரியாக்கவும், மருத்துவர்கள் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியைத் தூண்டும் ஆகியவற்றில் உதவியாக இருந்தது.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர். க. மாதேஸ்வரன் கூறுகையில், இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை துவக்கத்திலிருந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சி பெறும் மற்றும் புதிய மருத்துவர்களுக்காக நேரடி அனுபவ அடிப்படையிலான பயிற்சியுடன் கூடிய கருத்தரங்குகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக குறிப்பிட்டார்.