காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் ரோஜா பூ விற்பனை ஜோர்!
- by CC Web Desk
- Feb 12,2025
உலகம் முழுவதும் நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவைக்கு ரோஜாப் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு மற்றும் மைசூர் போன்ற பகுதிகளிலிருந்து கோவைக்கு ரோஜா பூக்கள் வந்து குவிந்துள்ளன. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் பூ விலை இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் உள்ளது.
கோவையில் சிவப்பு நிற பொக்கே ரோஜா பூ ஒன்று ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், எண்ணிக்கை, பேக்கிங், பிரத்தியேக டிசனைக்கு ஏற்ப பூ மார்க்கெட்டில் ரூ.100 முதல் ரூ.2000 வரை ரோஜாப் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இத்துடன் கோவையிலிருந்து ரோஜாப் பூக்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இப்போதே பூக்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.