பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக இன்று அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி அறிவித்திருப்பதன் மூலம் ஊரக பகுதிகளில் பாம்பு கடியின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு? இதனால் என்ன பயன்?
- by CC Web Desk
- Nov 08,2024