கள் விற்பனைக்கான தடையை அகற்ற வேண்டி கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- by CC Web Desk
- Mar 18,2025
கள் விற்பனைக்கான தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கள் குடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நல்லசாமி தலைமை வகித்தார். அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாத சூழல் உள்ள நிலையில், தமிழகத்தில் கலப்படத்தை காரணம் காட்டி கள்ளுக்கு தடை விதித்துள்ளதாக கூறிய விவசாயிகள், பிற மாநிலங்களில் மட்டும் கலப்படங்களை கட்டுப்படுத்து முடிகிற போது ஏன் தமிழகத்தில் அப்படி செய்ய முடியாது என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வி எழுப்பினர்.
மேலும் பனை, தென்னை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சில விவசாயிகள் கள் குடித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.