கோவை மாநகரம் உக்கடம் பகுதியில் சாலை ஓரமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பி1 பஜார் கடைவீதி காவல் நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சாலையோரமாக பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள், ஆட்டோக்கள் மீது போலீசார் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.

அதில் அவர்கள் இந்த வாகனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வழக்கு பதியப்படும் எனவும், சம்மந்தப்பட்ட வாகனம் கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படும் எனவும் நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.