கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அண்மையில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மருத்துவ மையமாக USA SURGICAL REVIEW CORPORATION [யு.எஸ்.ஏ - சர்ஜிகல் ரிவியூ கார்ப்பரேஷன்] எஸ்.ஆர்.சி யின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது என அம்மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:-
இந்த அங்கீகாரம் ராயல் கேர் மருத்துவமனையின் அர்ப்பணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த தரநிலையைப் பின்பற்றுவதில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்துள்ளது.
SRC அங்கீகாரத்தைக் கோரும் மருத்துவமனைகள் விரிவான மதிப்பீடு மற்றும் ஆய்வுகளில் ஈடுபட வேண்டியதுடன், அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, மருத்துவமனை உபகரணங்கள், மருத்துவ வழிமுறைகள், அறுவை சிகிச்சை செயல்முறைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக விரிவான மதிப்பீடு மற்றும் ஆய்வு செயல்முறைக்கு உட்படுகின்றனர்.
"ராயல் கேர் மருத்துவமனை அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், தரமான சிகிச்சையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க . மாதேஸ்வரன் கூறினார். மேலும், அவர் கூறுகையில், "ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சையில் துறையில் மிகச் சிறந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை வழங்கி வருகிறது என்பதை குறிக்கிறது" என்றார்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நரம்பியல்,முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். க. மாதேஸ்வரன், நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலை அறுவை சிகிச்சை நிபுணராக அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர். ஆர். செந்தில்குமார் ஆகியோர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளனர் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது ராயல் கேர் - அமெரிக்க சர்ஜிகல் ரிவியூ கார்ப்பரேஷன் பாராட்டு... இந்தியாவில் இந்த அங்கீகாரத்தை முதல் முறை பெற்று சாதனை!
- by CC Web Desk
- Nov 07,2024