கோவை மாவட்டத்தில் நேற்றைய மழை அளவு விவரங்களை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.

கோவையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பதிவான மழை அளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-

சின்கோனா சுற்றுவட்டாரப் பகுதிகளில் - 38; வால்பாறை பி.ஏ.பி சுற்றுவட்டாரப் பகுதிகளில் - 9;வால்பாறை தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் - 7; சோலையார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் - 57; சின்னக்கல்லார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் - 38;பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில்- 72; கோவை விமான நிலையம்- 6.5; பெரியநாயக்கன் பாளையம்- 12.2; தொண்டாமுத்தூர் - 26;சிறுவாணி அடிவாரம் - 3;கிணத்துக்கடவு - 13;மக்கினாம்பட்டி - 120;போத்தனூர் - 8; வாரப்பட்டி - 42; சூலூர் - 59.1;கோவை தெற்கு தாலுகா - 17.1; அன்னூர் - 2.4;பில்லூர் அணை - 49; மேட்டுப்பாளையம் - 0.55; தமிழ்நாடு வேளாண் பல்கலை - 9.6;ஆனமலை - 46; ஆழியார் - 4.

மொத்தம் கோவையில் நேற்று ஒரு நாளில் 647 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.