கோடை 2025 : கோவை மாநகரத்தில் மழையை சீக்கிரம் எதிர்பார்க்கலாம்! இன்று வாய்ப்புள்ளதா? இதோ வெதர் மேனின் அப்டேட்!
- by David
- Mar 11,2025
கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வெள்ளி இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகரம் உட்பட கொங்கு பகுதியில் பல்வேறு பகுதியில் அடுத்து 48 மணி நேரத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக இன்று மாலை நேரத்தில் கோவை மாநகரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
மழை மேகங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் சூழ துவங்கியிருக்கிற நிலையில், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மழை என்பது ஆங்காங்கே பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய அவர், இது கோடையின் துவக்க காலம் என்பதால் நிலைமை இப்படி இருக்கும். அதுவே ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் கனமழையை பரவலாகவே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.