மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவையில் நல்ல மழை பெய்து வெப்பத்தை தனித்தது.

இதற்கடுத்து சில நாட்கள் கோடையின் உச்ச வெப்ப சூழல் நிலவாமல், சற்று வெயிலின் தீவிரம் குறைவாக இருந்த சூழலில், கோவை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் இன்று மாலை 5 மணி அளவில் மழை பெய்ய துவங்கியது. கோவை அவிநாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், டவுன்ஹால், போத்தனுர் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. 

மழையின் தாக்கம் ...

சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரம் முறிந்து மின் வயர் மீது விழுந்தது. இதனால் சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பமும் சரிந்தது. அவ்வழியாக காரில் வந்த தம்பதியினர் நூலிழையில் உயிர் தப்பினர்.