பெங்களூரு - கண்ணூர் இடையே 2 நாட்கள் சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. 

 

அதன்படி 11.4.2025 இரவு 11.55 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் (06573) மறுநாள் காலை 8.12 மணிக்கு கோவை வந்த பின் மதியம் 1.30 மணிக்கு கேரளாவில் உள்ள கண்ணூர் வந்தடையும்.

 

அதன் பின்னர் 14.4.25 அன்று மாலை 6.25 மணிக்கு கண்ணுரில் இருந்து புறப்பட்டு 15.4.25 இரவு 12.27 மணிக்கு கோவை வந்து அங்கிருந்து காலை 8 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் ஈரோடு, சேலம் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.