2024 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவை வந்தபோது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடந்து சென்று இனிப்பு கடையில் இனிப்புகள் வாங்கி வந்து வீடியோ வைரல் ஆனது.

அவர் இனிப்பு வாங்கும் போது யாருக்காக வாங்குகின்றீர்கள் என கடையில் உள்ள பெண் கேட்டபோது, "எனது மூத்த அண்ணன் ஸ்டாலினுக்கு வாங்குகிறேன்" என ராகுல் கூறியது மக்களால் சமூக வலைத்தளங்களில் பெரிதும் விரும்பப்பட்டது.

இன்று ராகுல் காந்திக்கு பிறந்த நாள். இந்நிலையில் இன்று அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் காலையில் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ராகுல் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "நான் இன்று எனது இனிப்புகளுக்காக காத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.