கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.94க்குட்பட்ட கல்லுக்குழி வீதியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ்(SBM 2.0) ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம்; வார்டு எண்.90க்குட்பட்ட கோவைப்புதூர் மைதானம் அருகில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.13.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் (SBM 2.0) ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் என மொத்தம் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடங்களை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.