கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

 

இந்நிலையில் நாளை (18.2.2025) காலை மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிர்வாக காரணத்தால் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.