கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், வக்ஃபு திருத்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள், திரும்ப பெறுங்கள் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

அங்கு பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருடன் இனைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக இருக்கிறது என அவர்கள் கூறி, இதை ரத்து செய்ய கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டமானது கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவை உக்கடம்,அன்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.