கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமை தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு தற்போது வரை 230க்கும் அதிகமான வேலைவாய்ப்பு முகாம்களை மாநிலத்தில் நடத்தி உள்ளதாக அவர் கூறினார். இதனால் மொத்தம் 2.07 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.
இந்த முகாமில் வேலைத் தேடி மொத்தம் 8,334 பேர் (3,259 ஆண்கள் மற்றும் 5,075 பெண்கள்) பங்கேற்றனர். வேலை வழங்க 258 நிறுவனங்கள் கலந்துகொண்டனர். பணிக்கான தேர்வில் 1,492 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதை அமைச்சர் வழங்கினார்.