சிறுவாணி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.33.80 கோடி மதிப்பில் இந்த சாலையின் காளம்பாளையம் முதல் மாதம்பட்டி வரையிலான 5.2 கி.மீ. பகுதியை 4 வழிசாலையாக விரிவாக்கம் செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 5.2 கி.மீ. பகுதியின் விரிவாக்கத்தில் இரண்டு புறமும் 7.5 மீட்டருக்கு தார் சாலை, அதற்கடுத்து இருபுறமும் 1.5மீட்டருக்கு மண் ரோடு, இந்த இரண்டு பகுதிக்கு நடுவே 1.2மீட்டருக்கு சென்டர் மீடியன் அமைக்கப்படவுள்ளது.
தற்போது விரிவாக்கம் நடைபெறவுள்ள இந்த பகுதிகளில் மரங்களை அகற்றி மறுநடவு, பல்வேறு பணிகளுக்கான பைப்புகள், வயர்கள் போன்றவற்றை மாற்று இடத்துக்கு கொண்டுசெல்வது போன்ற ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுகிறது.
பொங்கலுக்கு பின்னர் சாலை பணிகள் துவங்கும் எனவும் பணிகள் ஆரம்பித்ததில் இருந்து 1 ஆண்டு காலத்தில் அதை முடிக்கவேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.33.80 கோடி மதிப்பில் சிறுவாணி சாலையை விரிவாக்கம் செய்ய ஆரம்பகட்ட பணிகள் துவங்கியது!
- by David
- Dec 28,2024