கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (9.12.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, இதனால் அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பணிகள் ரத்தானதால், அதன் கீழ் மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின் தடை ரத்தான பகுதிகள்: எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம் - எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், சுங்கா நகர், பெத்தேல் நகர், ஒண்டிப்புதுார் (ஒரு பகுதி) ஒண்டிப்புதூர் - திருச்சி ரோடு மற்றும் வி.கே. என்.நகர்.