கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால்  நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக கோவையின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை வித்திருந்தது வனத்துறை.

தற்போது இப்பகுதி நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பி உள்ளதால் இன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.