கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலுக்குள் சென்ற ஆதரவற்ற நாய் ஒன்றை யாரோ சிலர் அந்த மாலின் இரண்டாம் தளத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கின்றனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் வாயில்லாத ஜீவனுக்கு கோவை போலீசார் எடுக்கும் நடவடிக்கையால் நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு வாயில்லாத ஜீவன்கள் மீது அன்புள்ள அனைவரிடமும் உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய கூடுதல் விவரம் பின்வருமாறு :-

கடந்த பிப்ரவரி 8ம் தேதி  ப்ரோசோன் மாலின்  இரண்டாவது மாடிக்கு ஒரு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட அந்த வளாகத்தின் ஊழியர்கள் இதனை தூக்கி அங்கிருந்து வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் சிசிடிவி கட்சியின் தற்போது வெளியாகி உள்ள நிலையில் கௌதம் என்பவர் அதனை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகிறார். நாய்க்கு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து  அவர் கூறும் போது, வாயில்லா ஜீவனை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி விட்டார்கள். இதில் அந்த நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். நாய் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.