பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஏப்ரல் 9ல் மீண்டும் ஆஜராக உத்தரவு
- by CC Web Desk
- Apr 05,2025
2019ல் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ பதிவு செய்து பணம்பறிப்பு மற்றும் மிரட்டல் செய்து வந்தது வெளிவந்தது.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரினால் போலீசார் இந்த கும்பலை பிடித்தனர். இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019 முதல் இப்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பல கைதுகள் செய்யப்பட்டிருந்தாலும், முழுமையான விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் இந்த பாலியல் குற்ற வழக்கு இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து குற்றவாளிகள் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை மீண்டும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.