கோவை மாவட்டம் கோட்டூர் - தென் சங்கம்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சிறப்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி நேற்று மாலை சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 லட்சத்தை நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் நேற்று மாலை பணிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணவேணியின் வாகனத்தை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சிவகுமார் என்பவர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி உயிரிழந்தார். கிருஷ்ணவேணி தலை கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்ததாகவும் அவர் எதிரே வந்த வாகனம் தாறுமாறாக வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உயிரிழந்த காவலர் கிருஷ்ணவேணியின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது போல சாலையில் 2 சக்கர வாகனங்களில் பறக்கும் பலரும் வயது குறைந்த இளைஞர்களாக உள்ளனர். கோவையில் இவ்வாறு வாகனங்களில் செல்லும் நபர்கள் வேகத்தை குறைத்து சுற்றுப்புறத்தை நன்கு அறிந்து வாகனத்தை பொறுப்புடன் இயக்கவேண்டும் என பாதசாரிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
PC: Polimer News
அதிவேகமாக வந்த பைக் மோதி கோவை பெண் காவல் அதிகாரி மரணம்! சாலையில் பறக்கும் இளைஞர்கள் பொறுப்புடன் வாகனத்தை இயக்க பாதசாரிகள் வலியுறுத்தல்!
- by David
- Nov 01,2024