கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, நேற்று முதல் கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கள்ளச்சாராம் விற்கப்படுகிறதா என்பது பற்றியும், கலப்பட சாராயம் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

பேரூர், பெரியநாய்கன்ப்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய உட்கோட்டங்களில் மாவட்ட காவல் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் பிரிவினர் ஆய்வு நடத்தினர்.

இதில் கள் விற்பனை மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக 102 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 203 லிட்டர் கள், 1093 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த மது கலப்பட மதுவா என்பது பற்றி ஆய்வு நடத்த சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரிலும் இதேபோல சோதனைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.