"சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது. அதனால் கோவையில் அவர்கள் இருவரையும் உருவாக்கின தந்தை பெரியார் பெயரில் நூலகமும் அறிவியல் மையமும் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்," என இன்று கோவையில் பிரம்மாண்ட நூலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக கலைஞர் பெயரில் இந்த நூலகம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரியாருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

"இன்றைய இளைய சமுதாயம் வளர, வாழ தந்தை பெரியாருடைய நூலகமும் அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக மிகச் சிறப்பாக உருவாக இருக்கிறது," என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் திறக்கப்படும் என்ன தெரிய வருகிறது.