கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வரும் பிப்ரவரி 25ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தரவுள்ளார். 

26ம் தேதி கோவை மாநகரில் நடைபெறும் நிகழ்வில் அவர் பங்கேற்று பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து, அன்று மாலை கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் வருகிற 25 ஆம் தேதி அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி விமான நிலையம் அருகில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.