கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 21.09.2024 அன்று காலை 8 மணியளவில் ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 250க்கும் அதிகமான உற்பத்தி, ஜவுளி, பொறியியல், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் என வெவ்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் மொத்தமாக 15,000 வேலை காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டு உள்ளனர்.
இதில் பள்ளி கல்வி முடித்தவர்கள், இளநிலை, முதுகலை பட்டம், டிப்ளமோ பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை எனவும் முன்பதிவு கட்டணம் எதுவும் இல்லை எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்ள வரும் நபர்கள், தங்களின் சுயவிவரம்/ Bio-Data மற்றும் கல்வி தகுதி சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு முகாமிலேயே நியமன ஆணை வழங்கப்படும்.
இந்த முகாம் குறித்து, வேலைவாய்ப்பை தேடுபவர்களும், வேலையளிக்க விரும்பும் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை பெறலாம்.
கேள்விகளுக்கு வேலைதேடுபவர்கள் 0422-2642388/9499055937 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். வேலையளிப்போர் (Employer) 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கோவை மாநகரில் செப்டம்பர் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
- by David
- Sep 02,2024