கோவை ரத்தினபுரியில் அமைந்துள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் (St.Paul's Church) மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்து, இஸ்லாமியர்கள் , கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் ஆகிய 4 மதத்தினரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது!
- by CC Web Desk
- Dec 25,2024