வெகு நாட்களாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவில் அருகே உள்ள கள்ளிமேடு வீதி பகுதியில் உள்ள சாலை அந்த பகுதி மக்களாலேயே பயன்படுத்திட முடியாத வகையில் பல இடங்களில் உடைந்து குண்டுகுழியாக இருந்தது. 

2 மாதங்களுக்கு முன்னர் தான் அப்பகுதியில் புது சாலை அமைக்கப்பட்டது.  ஆனால் தற்போது அந்த சாலை மீண்டும் கிட்டத்தட்ட பழையநிலைக்கே சென்றுள்ளது. 

இதனால் அந்த வழியே செல்வது வாகனஓட்டிகளுக்கு கடினமதாக அமைந்துள்ளது. 

நிலைமை இப்படி இருக்க, தற்போது அந்த சாலை மீது கோவை மாநகராட்சியின் பணி நடைபெறத்துவங்கியுள்ளது. சாலையின் ஒரு ஓரம் நெடுநீலத்திற்கு உடைக்கப்பட்டு தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 

புது சாலை அமைத்து 2 மாதமே ஆன பின்னர் அதை மீண்டும் உடைத்து வேறொரு பணியை செய்வதற்கு பதில், தற்போது நடைபெறும் பணியை முடித்து விட்டு அதற்கு பின்னர் சாலையை புதிதாக தரமாக, அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.