மேம்பாலத்தின் கீழ் பார்க்கிங் வசதி ... கோவை காந்திபுரம் - சத்தி சாலை வழியே உருவாகிறது!
- by David
- Apr 21,2025
கோவை ஆம்னி பேருந்து சமீபத்தில் ரூ.3 கோடி+ மதிப்பீட்டில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கான டிக்கெட் முன்பதிவு அலுவலகங்களும் உள்ளன.
ஆனால் பேருந்து நிலையத்துக்கு பயணிகளுடன் வருவோர், டிக்கெட் முன்பதிவு செய்ய வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால், ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாக குற்றசாட்டு உள்ள நிலையில், ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வெளியே ஜி.பி.சிக்னல் வழியே செல்லும் மேம்பாலத்தின் இறங்குதளத்திற்கு கீழ் உள்ள காலி இடங்களை வாகன நிறுத்துமிடமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் சமீபத்தில் துவங்கின. மேபலத்தின் கீழ் 100-130 இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்காக பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அதேபோல 30 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பேருந்து நிலையத்துக்கு எதிரே 25 சென்ட் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகள் முடிவு பெற்றதும் ஆம்னி பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் எளிதாக நிறுத்த முடியும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்த கட்டணம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. அதுபற்றி பணிகள் முடிவடைந்த பின்னர் முடிவு செய்யப்படும் என தெரியவருகிறது.