கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம்  உள்ளது.

பழைய கட்டிடம் என்றாலும் இதை இடிக்காமல் மறுசீரமைக்க கோவை மாநகர துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தது. மேலும் இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசை வாத்தியங்களுக்கான அறை, மின்சார அறைகளும் காவலர்களுக்காக புதிய கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. 

இந்த கட்டிடத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.