மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் 2024 மத்திய பட்ஜெட்டை வரவேற்பதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கம் அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறியதாவது:

 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொழில்துறைக்கு மிகுந்த பயனளிக்கும்.

 

மத்திய அரசு பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்குப் பிணை இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும்.

 

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தும் போது ஏற்படும் காலதாமதத்திற்கு special mention account SMA அடிப்படையில் வங்கி நிதி உதவி செய்து வங்கிக் கணக்கு NPA ஆகாமல் தடுக்க உதவி புரியும்.

 

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு முதல் மாத சம்பளத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்பது தொழில் துறைக்கு மிகுந்த பயனளிக்கும் 

 

வரும் 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும் பயனளிக்கும்.

 

இவ்வாறு அருள்மொழி தெரிவித்துள்ளார்.