மீண்டும் துவங்கியது ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ... கோவை மக்கள் மகிழ்ச்சி!
- by David
- Mar 13,2025
Coimbatore
நேற்று நீலகிரி மாவட்டம் ஹில்குரோவ் - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் வரும் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
நேற்று ரயில் கல்லாறு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திருப்பி அனுப்பட்டது. ரயில் பாதையில் பாறையை அகற்றி, சேதமான ரயில் தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து உள்ளனர். இந்நிலையில் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் துவங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடை காலம் என்பதால் உதகைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.