ஜி.பி. சிக்னல் ஒட்டி வரும் மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தரமுயர்த்தல் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 

பேருந்து நிலைய வளாகத்தின் மைய பகுதி, வலது, இடது, பின்புறம் ஆகிய 4 பகுதிகளில் மேற்க்கூரைகள் பொருத்துவதற்கான கம்பங்கள் நிறுவப்பட்டு இருந்த நிலையில், தற்போது மையப்பகுதியை தவிர பிற பகுதிகளில் மேற்கூரைகள் பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில் அதுவும் பொருத்தப்படும். தற்போது மேற்க்கூரைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் வளாகத்திற்குள்ளே நிறுத்தப்பட துவங்கியுள்ளன. இதற்கு பின்னர் வளாகத்தில் சமமான தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும். வழக்கமாக தார் சாலைகள் அமைப்பதற்கு பதில் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் ஆர்.சி.சி. (RCC - Reinforced Cement Concrete) எனும் முறையில் அங்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பணிக்கான திட்டம் சென்னைக்கு ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். 

கழிவறை வளாகத்திற்கான பிளம்பிங் வேலைகள் எல்லாம் தயாராகிவிட்டது. டைல்ஸ் மட்டும் ஒட்ட வேண்டும். அதுவும் ஒரு வாரத்தில் நடைபெறும். இத்துடன் மழைநீர் வடிகால், பச்சிளம்குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்டிட அறைகள் என பல வசதிகளும் இங்கு முறையாக கட்டி முடிக்கப்படும். எப்படியும் 2025 பிப்ரவரி வரை ஆம்னி பஸ் ஸ்டாண்டு பணிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Photos by David Karunakaran.S