ஆதரவற்றோர் நலனுக்காக 'காவல் கருணை இல்லம்' எனும் வளாகம் கோவை வேடப்பட்டி ரோடு வீரகேரளம் அருகில் உள்ள  ராகவேந்திரா கார்டன் கிழபுரம் தாய் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் சுமார் 2500 சதுர அடி கொண்டது. இதில் 3 தளங்கள் உள்ளன. இதை ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் N.K.வேலு மற்றும் நாச்சிமுத்து ராமாத்தாள் என்பவரின் குடும்ப வாரிசுகள் காட்டியுள்ளனர். இந்த கட்டிடத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். இதை ஹெல்பிங் ஹார்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஆதரவற்றோர் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.